இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை PM YASASVI Top Class Education In Schools for OBC, EBC & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதர பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கியவர்கள் மற்றும் சீர் மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 2.50 லட்சம் ஆக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 15 இன்றுடன் நிறைவடைகிறது. இந்த திட்டம் 9,11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தில் விண்ணப்பி https://scholarships.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
