தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க… புதிய மாஃபியா… ஒரு ரீல்ஸ்க்கு ரூ.400 ரேட்… வாடகை அக்கவுண்ட்டில் ஆட்டம் போட்ட கும்பல்… இறுதியில் நேர்ந்த ட்விஸ்ட்…!!

By Gayathri on ஐப்பசி 25, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டத்தில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பழிவாங்கும் வகையிலான பதிவுகளும் மிரட்டல் வீடியோக்களும் பரவி வருகின்றன. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் வெளியானதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மோதல்களைத் தூண்டும் நபர்களைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில், குற்றப் பின்னணி இல்லாத சிலரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை வாடகைக்கு எடுத்து, அவற்றின் மூலம் வன்முறையைப் பிரதிபலிக்கும் ரீல்ஸ் மற்றும் மிரட்டல் பதிவுகளை வெளியிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வீடியோவைப் பதிவிடுவதற்கு ரூ.400 வரை பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வீடியோவில் இடம்பெற வேண்டிய வசனங்கள், பின்னணி இசை மற்றும் எடிட்டிங் உள்ளிட்ட விவரங்களையும் சிலர் முன்கூட்டியே வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் மோதல்களைத் தூண்ட முயன்றதாகக் கூறப்படுகிறது.

   

இதையடுத்து, சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளக் கணக்குகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வன்முறையைத் தூண்டும் பதிவுகள் தொடர்பாக 44 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறிய தொகைக்காக வன்முறையைப் பரப்பும் பதிவுகளை வெளியிடுவது சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், சமூக வலைதளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.