Vels Films production company

முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ. 23 கோடி மோசடி செய்த தொழிலதிபர் கைது – கோலிவுட் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு!

By Elango on மாசி 9, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்த முன்னணி நிறுவனம் வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம். இந்நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 23 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் ஈவிபி சந்தோஷ் ரெட்டியை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அளித்த புகாரின் பேரில் ஈவிபி சந்தோஷ் ரெட்டி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் ஈவிபி குழுமத்தின் சந்தோஷ் ரெட்டி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கூட்டாளிகள் வினோத் மற்றும் கிரண் ராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். சோழிங்கநல்லூரில் 34.75 ஏக்கர் நிலம், ஸ்டுடியோக்கள் உள்ளிட்டவைகளை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் கட்டடங்கள் அனைத்தும் சட்டபூர்வ அனுமதி பெற்றவை என போலி வாக்குறுதி அளித்து ஏமாற்றி ரூ. 23 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.