தமிழ்நாட்டு அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிப்பவர்களுக்கு, தமிழ் மொழி திரன்றித் தேர்வை அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1500 வழங்கப்படும்.
தேர்வு நடக்கும் தேதி : 11.10.2025 (சனிக்கிழமை)
தேர்வு நடத்தப்படும் முறை : இந்த தேர்வில், 50 சதவீத அரசு பள்ளி மாணவர்களும், மீதி 50 சதவீதம் அரசுப்பள்ளி உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும், தேர்வு செய்யப்படுவார்கள்.
பாடத்திட்டம் : பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள ஏழு(7) இயல்களில், இயல் 2-ல் உள்ள மேகம், பிரும்மம், இயல் 6-ல் முத்தொள்ளாயிரம், இயல் 7-ல் அக்கறை ஆகிய 4 தலைப்புகளைத் தவிர்த்து, வினாக்கள் கேட்கப்படும்.
கொள்குறி வகையில், மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
- www.dge.tn.gov.h என்ற இணையதளம் மூலம் 22.08.2025 முதல் 04.09.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
- தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.
