பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்க மற்றும் இடைநிற்றலை குறைப்பதற்காக காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தி வருகிறது. மேலும் இலவச பேருந்து பயண அட்டை, இலவச மிதிவண்டி மற்றும் பாட புத்தகங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதே சமயம் மாணவர்களின் கல்வித்திறமையை அதிகரிக்க போட்டித் தேர்வுகளையும் அரசு நடத்தி வருகிறது.
அதன்படி பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திறனறி தேர்வு இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் இருந்தும் 2,70,508 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாநிலம் முழுவதும் 950 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு பள்ளி கல்வி இயக்ககம் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
