நான் முதல்வரானால் அனைத்து மகளிருக்கும் தலா ரூ.1,00,000… தமிழகத்தையே அதிரவிட்ட திமுக MLA… பெரும் பரபரப்பு..!

By Soundarya on பங்குனி 23, 2026

Spread the love

தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன், தான் முதலமைச்சரானால் அனைத்து மகளிருக்கும் தலா ₹1,00,000 வழங்கப்படும் என்று கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானால் குடும்பத்திற்கு ₹10,000 தருவதாகக் கூறி வரும் நிலையில், அதை விடப் பல மடங்கு அதிகமாகத் தருவேன் என மகாராஜன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், மகாராஜனின் இந்தப் பேச்சு திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தான் முதலமைச்சரானால் இவ்வளவு பெரிய தொகையைத் தருவேன் என்று அவர் பேசியது சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.