மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று (பிப். 01) தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2026-27-ல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை (MSME) உலகளாவிய அளவில் போட்டியிடச் செய்யும் வகையில் ₹10,000 கோடி மதிப்பிலான SME வளர்ச்சி நிதி (SME Growth Fund) உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த நிதியுதவியானது குறுந்தொழில்களைப் பெரிய அளவிலான நிறுவனங்களாக மாற்றவும், அவற்றுக்குத் தேவையான மூலதன ஆதரவை வழங்கவும் பயன்படுத்தப்படும்.
இது தவிர, உற்பத்தியை ஊக்குவிக்கவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் 200 பழமையான தொழில் தொகுப்புகளை நவீனமயமாக்கும் திட்டத்தையும் நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார். இத்துடன், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆதரிக்க ‘Fund of Funds’ திட்டத்திற்கு கூடுதலாக ₹10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை கணிசமாக உயர்த்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளன.
