சமீபத்தில் பீஹாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெண் வாக்காளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழகத்திலும் இதுபோல ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஆர் எஸ் மணி கூறுகையில், பீகாரை போல திமுகவிற்கும் அப்படி ஒரு திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பீகாரில் பெரிய அளவிலான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். தேர்தல் நெருங்கும் போது தொழில் தொடங்கும் பெண்களுக்கு வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் திமுக 10,000 ரூபாயை ஏதாவது ஒரு வகையில் மகளீரின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய். பிறகு தகுதி உள்ள பெண்களுக்கு பணம் என கூறினார்கள். 2 கோடி பெண்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பணம் வழங்கப்பட்டது. தற்போது விடுபட்ட பெண்கள் என 20 லட்சம் குடும்பத் தலைவிகளை சேர்த்துள்ளனர். அவர்களுடைய வங்கி கணக்கில் விரைவில் பணம் பரவ வைக்கப்பட உள்ளது. இந்த மகளிர் உரிமைத் தொகையையும் ஆட்சிக்கு வந்த 27 மாதங்கள் கழித்துதான் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
2021 மே மாதம் அதிகாரத்திற்கு வந்தவர்கள் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் திட்டத்தை செயல்படுத்தினார்கள். 27 மாதம் நிலுவை இருக்கிறது என்ற கான்செப்ட்டை உருவாக்கி இதில் பத்து மாதத்திற்கு உரிய பணத்தை நாங்கள் செலுத்துகிறோம் என்று ஒட்டுமொத்தமாக கொடுத்துவிடுவார்கள். பத்தாயிரம் ரூபாய் கொடுத்த மாதிரி கொடுத்தது போல ஆகிவிடும். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, 27 மாதம் பேலன்ஸ் உள்ளது. அதில் பத்து மாதம் பணத்தை நாங்கள் ஒரு கோடி பெண்களுக்கு பொங்கலுக்கு வங்கி கணக்கில் சேர்க்கிறோம். மீதி இருக்கக்கூடிய 17 மாதத்திற்கான பணத்தை அடுத்த முறை ஆட்சிக்கு வந்ததும் வங்கி கணக்கில் செலுத்துகிறோம் என்று திமுக அரசு முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…
குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…
நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…