“நீ மட்டும் ராணுவத்தில் சேர்ந்துவிட்டால், உன்னை எனது தோள்களில் சுமந்து ஊர் முழுவதும் சுற்றி வருவேன்”… வைரலாகும் இதயத்தை வென்ற வீடியோ…!!!

By Rajeshwari on பங்குனி 10, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், நட்பின் ஆழத்தை பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞன், தனது நண்பனிடம் “நீ மட்டும் ராணுவத்தில் சேர்ந்துவிட்டால், உன்னை எனது தோள்களில் சுமந்து ஊர் முழுவதும் சுற்றி வருவேன்” என்று ஒருமுறை வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த நண்பனும் விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து, இந்திய ராணுவத்தில் இணைந்து தேசப்பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். பயிற்சியை முடித்து அவர் தனது கிராமத்திற்குத் திரும்பியபோது, சொன்ன சொல்லைக் காப்பாற்றும் விதமாக அந்த இளைஞன் தனது நண்பனைத் தோளில் சுமந்து ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.

   

“>

   

மேலும் “ஜெய் மாதா கி” என்ற முழக்கங்கள் விண்ணதிர, தனது நண்பனைத் தோளில் சுமந்து அந்த இளைஞன் வீதி வீதியாகச் சென்றது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அபூர்வ நட்பைக் காண அந்த கிராமமே அவர்கள் பின்னால் திரண்டு வந்தது.

 

இந்நிலையில் நாட்டின் மீதான பற்றும், நண்பனின் வெற்றியைக் கொண்டாடும் அந்தத் தூய்மையான அன்பும் கலந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. உண்மையான நட்புக்கு இலக்கணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் செயல், பலரது பாராட்டுகளையும் இதயங்களையும் வென்றுள்ளது.