“16 வழக்குகள்… ஒரு கள்ளக்காதல்”…. காட்டுக்குள் தூக்கில் தொங்கிய பிரபல ரவுடி…. திருவள்ளூரை உலுக்கிய கொடூர சம்பவம்…!

By Nanthini on பங்குனி 21, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 16-க்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்குச் சுமித்ரா என்ற மனைவி இருக்கும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மகள்கள் கொண்ட தேவியுடன் சரவணன் நீண்ட நாட்களாகத் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தேவியின் வீட்டிற்குச் சென்ற சரவணன் அங்கு அவரது மகளிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிகிறது. இது குறித்துத் தேவி அளித்த புகாரின் பேரில், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சரவணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த சரவணன், தன் மீது புகார் அளித்த தேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார்.

   

இந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக ஆவடி அனைத்து மகளிர் காவல் துறையினர் சரவணனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற பயத்திலும், கடும் மன உளைச்சலிலும் இருந்த சரவணன், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை ஓரத்தில் மரம் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

இந்நிலையில், சரவணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சுமித்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தேவி, இளையராஜா மற்றும் குமரன் ஆகிய மூவரும் சேர்ந்து தனது கணவரை நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அந்தத் தொல்லையாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் சுமித்ரா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.