மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைச் சம்பவங்கள் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதில் குறிப்பாக, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சரவணன் என்ற ‘சப்பாணி’ சரவணன் (50) என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு ஒன்றில் சிறை சென்று சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சோலையழகுபுரம் பிரதான சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் சரவணன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்மக் கும்பல் ஒன்று அவரை ஆயுதங்களுடன் திடீரென சூழ்ந்துகொண்டது. தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரவணன், அவர்களிடம் இருந்து தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
ஆனாலும் விடாமல் துரத்திய அந்த கும்பல், அவரை ஓட ஓட விரட்டிச் சென்று கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த துணிச்சலான கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும்…
தமிழ்நாட்டில் 16 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் அதிவேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த…
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பண்டிகைக் கால முன்பணமாக ரூ.20,000 வழங்கிட அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள செய்தி தொழிலாளர்கள் மத்தியில்…
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் சந்தித்து வரும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாகவே…
ஹைதராபாத் ஐஎஸ் சதன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 வயதான இசானுதீன் என்ற சிறுவன், தனது பெற்றோருடன் சாட் உணவகம்…
நள்ளிரவு நேரத்தில் களைப்பாக இருந்த தாய் ஒருவர் தனது மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது சிறிய மகள் தானும்…