திடீரென இடிந்து விழுந்த கூரை… சுதந்திர தின விழாவில் நடந்த விபரீதம்… 8 வயது சிறுவன் துடிதுடித்து உயிரிழப்பு… உ.பி.யில் நடுநடுங்க வைக்கும் கோர விபத்து…!!

By Gayathri on ஆவணி 16, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அல் ஹசன் பள்ளியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பெரும் சோகம் நிகழ்ந்தது. மாணவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்கள் பள்ளியின் நுழைவு வாயில் கூரையின் மீது ஏறியுள்ளனர். அப்போது அந்தக் கான்கிரீட் கூரை எதிர்பாராத விதமாகத் திடீரென இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 8 வயது சிறுவனான நிஜாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் அவருடன் இருந்த இரு சிறுவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சம்பல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விபத்து நடந்த பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய விழாவில் நிகழ்ந்த இந்தச் சோக விபத்துக்கான காரணங்கள் குறித்துத் தீவிரமாக அறிந்துகொள்ள, விரிவான அதிகாரபூர்வ விசாரணைக்கு அவர்கள் தற்போது உத்தரவிட்டுள்ளனர்.