ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- ப்ளூ சட்டை மாறனை சரமாறியாக தாக்கிய விஜய் ஆண்டனி! என்னவா இருக்கும்?

By Arun on சித்திரை 20, 2024

Spread the love

விஜய் ஆண்டனி, மிர்ணாலினி ரவி ஆகியோரின் நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் “ரோமியோ”. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. எனினும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்கள் பலரும் இத்திரைப்படத்தை மிக கடுமையாகவே விமர்சித்திருந்தனர்.

   

குறிப்பாக புளூ சட்டை மாறன், தனது வழக்கமான ஸ்டைலில் இத்திரைப்படத்தை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது “X” தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார்.

   

அதில், “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் திரு. புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

 

எனது அன்பு மக்களே, ரோமியோ ஒரு நல்ல படம், போய் பாருங்க புரியும்

ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.