பிரபல நடிகையும் ஆந்திராவின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மந்திரியாக இருந்தவரும் தான் ரோஜா. இவர் அரசியலில் ஊழல் செய்து ஆயிரம் கோடி சம்பாதித்ததாக நகரி தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ பானு பிரகாஷ் குற்றம் சாட்டி இருந்தார். அவருக்கு சமீபத்தில் அடித்த பேட்டியில் பதிலளித்த ரோஜா, எனக்கு பல ஊர்களில் வீடு இருப்பதாக பானு பிரகாஷ் கூறுகின்றார். ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள வீடுகள் நான் எம்எல்ஏவாக வெற்றி பெறுவதற்கு முன்பு சம்பாதித்த சொத்துகள்.
1991 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கின்றேன். தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளேன். இதனைத் தவிர விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் கடை திறப்பு விழாக்கள் என்று ஓய்வில்லாமல் உழைத்து சம்பாதித்துள்ளேன். ஒரு திரைப்படத்தில் நடித்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவார்கள். நகரியில் மட்டும் தான் நான் வெற்றி பெற்ற பிறகு சொந்த வீடு கட்டிக் கொண்டேன்.
என்னுடைய சொத்துக்களுக்கும் சம்பளத்திற்கும் கணக்கு உள்ளது. அப்படி இருக்கும்போது அரசியலுக்கு வந்த ஊழல் செய்து ஆயிரம் கோடியை சம்பாதித்தேன் என்று சொல்வது மிக தவறு. உண்மையாக இருந்தால் பானு பிரகாஷ் அதனை நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார். ஆனால் நிரூபிக்க தவறினால் பானு பிரகாஷ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்ட அரசியலை விட்டு விலக தயாரா என்று ரோஜா சவால் விட்டு உள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…