‘ரோஜா’ பட நடிகை மதுபாலாவை ஞாபகமிருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் வீடியோ… 

By Begam

Updated on:

தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அரவிந்த்சாமி, முதல் படத்திலேயே தனது அபார நடிப்பால் ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்டார். அதன்பிறகு இவர் நடித்த “ரோஜா” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார். இத்திரைப்படம் 1992 ஆகஸ்ட் 15ம் தேதி ரோஜா திரைப்படம் வெளியானது.

   

கே.பாலச்சந்தர் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ரோஜா திரைப்படம் மட்டும் இல்லாமல், அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனது. அது மட்டும் இல்லாமல் இந்த ஒரு படத்தின் மூலம் பல பெண் ரசிகைகளை தனதாக்கி கொண்டார் அரவிந்த்சாமி.

ரோஜா படத்தில் ரிஷி குமார் என்ற கேரக்டரில் அரவிந்த் சாமியும், அவருக்கு ஜோடியான ரோஜா கேரக்டரில் மதுபாலாவும் நடித்திருந்தனர். கிராமத்தில் அக்காவை பெண் பார்க்கச் செல்லும் அரவிந்த் சாமி, மதுபாலாவை பிடித்திருக்கு என சொல்ல, அங்கிருந்து தொடங்கும் கதை காஷ்மீர் அழகியலில் சிலிர்க்க வைக்கும்.

நடிகை மதுபாலாவின் நடிப்பு இத்திரைப்படத்தில் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே  தொழிலதிபர் ஆனந்த் ஷாவை திருமணம் செய்துகொண்டு, மும்பையில் வசதிபடைத்தவர்கள் வாழும் மலபார் ஹில்ஸ்சில் அரண்மனை போன்ற வீட்டில் வசித்து வருகிறார். அதோடு மட்டுமின்றி தற்பொழுதும் இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி இவர் பிசியாக நடித்து வருகிறார். தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)