savi

ஒதுக்கிவைக்கப்பட்ட மனோஜ்… ரோகிணியின் அம்மா கூறிய அறிவுரை… சிறகடிக்க ஆசையில் இன்று…

By admin on மார்கழி 28, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகினி வசமாக சிக்கிக் கொண்டதால் விஜயா ரோகினியை வச்சு செய்து விட்டார். இரண்டு அடி அடித்தும் விட்டார். அடுத்ததாக மனோஜிடம் வந்து உனக்காக நான் எல்லாம் பண்னேன் ஆனா நீ என்ன மாட்டிவிட்டுட்டு தப்பிச்சிட் என்று கூறிவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு கிளம்புகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

   

இன்றைய எபிசோடில் ரோகினி வீட்டை விட்டு கிளம்புகிறாள். மனோஜ் எதுவுமே சொல்லாமல் இருக்கிறார். இதற்கிடையில் அண்ணாமலையும் விஜயாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை நீ என்ன இருந்தாலும் ரோகினியை அடிச்சது தப்பு 3 மருமகளையும் ஒரே மாதிரி நினை என்று அறிவுரை கூறுகிறார். மனோஜ் வந்து விஜயாவை கூப்பிட்டு அம்மா ரோகிணி எங்க போறேன்னு சொல்லாம கிளம்பி போயிட்டாம்மா எனக்கு பயமா இருக்குமா என்று கூறுகிறார்.

   

உடனே விஜயா போனவளுக்கு வர தெரியும் நீ பேசாம இரு என்று கூறி விடுகிறார். அடுத்ததாக ரோகிணி தன் அம்மாவின் வீட்டுக்கு சென்று அம்மாவின் மடியில் படுத்து அழுகிறாள். ரோகிணியின் அம்மா ரோகினிக்கு பல அறிவுரைகளை கூறுகிறார். உன் மாமியாருக்கு எதுக்கு கோபம் வந்து இருக்கு மனோஜ் இந்த மாதிரி தப்பு வழக்கமா பண்ணுவாரு, நீ பொய் சொன்னது தான் உங்க மாமியாரால ஏத்துக்க முடியல அதனால தான் இப்படி கோபப்பட்டு இருக்காங்க. ஆனா நீ என்ன நடந்து இருந்தாலும் நீ வந்து இருக்க கூடாது. அது இன்னும் அவங்கள அதிகமா தான் கோபப்படுத்தும்.

 

உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் அப்படிங்கறதுக்காகத்தான் நான் சொல்றேன் என்று சொன்னவுடன் ரோகிணி தன் வீட்டிற்கு செல்கிறாள். சென்றவுடன் யாருமே அவரை கண்டு கொள்ளவில்லை. விஜயா ரூமுக்கு சென்று விஜயாவிடம் ஆன்ட்டி நான் மனோஜுக்காக தான் எல்லாம் பண்ண மனோஜ் வந்து நல்ல முறையில இருக்கணும் எல்லா முன்னாடி நல்லா மரியாதையா இருக்கணும் தான் நான் பண்ணேன்.

நான் அந்த பணத்தை வைத்து எனக்காக துணி மணியோ நகையோ எதுவுமே நான் வாங்கலையே என்று கூறுகிறார். உடனே விஜயா மறுபடியும் மறுபடியும் நீ உன் மேல இருக்க தப்பா மறைக்கிறதுக்கு நீ அவனை சொல்றியா என்ன இருந்தாலும் என்கிட்ட நீ உண்மைய மறைச்சிருக்க கூடாது என்று சத்தம் போட்டு அனுப்பி விடுகிறார். அடுத்ததாக சுருதியும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். வர வர ஆன்ட்டி சீரியல் வர மாமியார் மாறி ஆயிட்டு இருக்காங்க நம்ம கவனமா இருக்கணும் என்று சுருதி கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. அடுத்த வாரம் ரோகிணியின் நிலைமை என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.