சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் பணத்தை ஏமாற்றி சென்றவனை சிட்டி மூலமாக கண்டுபிடிக்கலாம் என்று ரோகினி திட்டம் தீட்டுகிறார். சிட்டியும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் சிசிடிவி புட்டேஜ் கிடைக்கவில்லை. மனோஜை போலீஸ் ஸ்டேஷன் மூலமாக வாங்க சொல்கிறார் ரோகிணி. அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் மலேசியாவில் இருந்து வந்தவர்களை வீட்டிற்கு விருந்து சாப்பாடு சாப்பிட முத்து கூட்டிட்டு வருவதாக சொல்கிறார். மீனா வீட்டில் தடல் புடலாக எல்லாம் தயார் செய்து கொண்டிருக்கிறார். அப்போது மீனாவிடம் சுருதி அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் ரொம்ப கிரேட் மீனா எப்படி இவ்ளோ வேலையும் சலிக்காமல் செய்றீங்களே தெரியல என்று கூறுகிறார். உடனே மீனா என்ன சுருதி செய்வது இந்த வீட்ல நான் தானே எல்லா வேலையும் பார்த்தாகணும். அத்தை என்ன மருமகளா இன்னும் ஏத்துக்கல. இந்த வீட்ல சம்பளம் இல்லாத வேலைக்காரி தான் நான் என்று கூறுகிறார்.
அதை கேட்ட சுருதி அத்தை இனிமேல் உங்களை எதாவது அந்த மாதிரி பேசுனாங்கன்னா நான் கேட்கிறேன் மீனா என்று கூறுகிறார். அடுத்ததாக ரோகிணி கூறியபடியே மனோஜ் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சிசிடிவி ஃபுட்டேஜ் வாங்கலாம் வாங்க என்று கலாட்டா செய்து கொண்டிருக்கிறார். உடனே இன்ஸ்பெக்டர் மனோஜை சத்தம் போட்டு பெட்டிஷன் எழுதி கொடுத்துட்டு போ உன் இஷ்டத்துக்கு எல்லாம் இங்க வேலை செய்ய ஆள் கிடையாது என்று அனுப்பி வைக்கிறார்.
அடுத்ததாக வீட்டிற்கு மலேசியாவில் இருந்து வந்த வயதான தம்பதியை முத்து கூட்டிட்டு வருகிறார். வந்ததும் வீட்டில் உள்ளோரை அறிமுகப்படுத்திவிட்டு இது பார்லர் அம்மா ஊர்காரங்க இவங்க என்று முத்து கூறிய உடனே விஜயா சந்தோஷம் அடைந்து அப்படியா என் மூத்த மருமகள் மலேசியா தான் அவர் பெரிய கோடீஸ்வரி என்கிறார். உடனே அவர்களும் அப்படியா அவங்களை கூப்பிடுங்க எனக்கு நிறைய பேர் அங்க தெரியும் யாருனு நான் சொல்றேன் என்று கூறுகிறார்.

ரூமில் இருந்த ரோகினி இதையெல்லாம் கேட்டுவிட்டு போச்சு இன்னைக்கு நல்லா மாட்ட போறோம் என்று யோசித்து எப்படிடா தப்பிக்கலாம் என்று பிளான் செய்து பஞ்சை எடுத்து வாய்க்குள் கன்னத்தில் வைத்துக்கொண்டு பல்வலி என்று நாடகம் ஆடுகிறார். பேசவே முடியாதது போல் நாடகமடைகிறார். ஆனால் முத்து சந்தேக பார்வையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே நான் ஹாஸ்பிடலுக்கு போறேன் என்று கூறவும் ஸ்ருதி நீ கூட போயிட்டு வா அப்படின்னு சொல்லி சுருதியையும் கூட அனுப்பி வைக்கின்றனர். ஆனால் முத்து நம்பவே இல்லை ரோகினியை சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
