மீனாவுக்கு சவால் விடும் தொழில் போட்டியாளர்… பொய் மேல் பொய் சொல்லும் ரோகிணி… சிறகடிக்க ஆசையில் இன்று…

By Meena on ஜனவரி 9, 2025

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றை எபிசோடில் ரோகினி சிட்டியிடம் கடன் வாங்கிய விஷயத்தை முத்து ரவியிடம் சொல்லி மனோஜிடம் கேட்க சொல்லுகிறார். மீனா நேரடியாக அந்த விஷயத்தை ரோகிணியிடம் கேட்டு விடுகிறார். இதைக் கேட்ட ரோகிணி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். இவர்களுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

   

இன்றைய எபிசோடில் முத்து சொன்னதை கேட்டுவிட்டு ரூமிற்கு வந்த மனோஜ் ரோகினியிடம் நீ சிட்டிகிட்ட கடன் எதுவும் வாங்கினியா அந்த முத்துவோட மச்சான் அவங்க கிட்ட வேலை பார்த்தான் அவன் உன்ன அங்க பார்த்தானாம் என்று சொன்னான் நீ என்ன பண்ணுன என்று மனோஜ் கேட்கிறார். உடனே ரோகினி பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார். ஒரு பொய் சொல்வதற்கு மற்றொரு பொய் என பொய் மேல் பொய்யாக அடுக்கி கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். ஆமா நான் சிட்டி கிட்ட கடன் வாங்குனது உண்மைதான். ஆனால் உனக்காக தான் வாங்கினேன்.

   

நான் கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் கடன் வாங்கவே இல்ல. உன்ன கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் கடன் மேல கடன் வாங்கிட்டு இருக்கேன். நீ நடுவுல வேலை இல்லாம சும்மா இருந்தல்ல அப்ப நமக்கு எவ்வளவு செலவாச்சு வீட்டுக்கு வேற பணம் கொடுக்கணும் அதனால தான் நான் வாங்கினேன். அந்தக் கடனையும் நான் கட்டிட்டு தான் இருக்கேன் என்று கூறுகிறார். அடுத்ததாக முத்துவும் மீனாவும் சினிமாவில் நடிக்கும் ஒருவரிடம் பூ ஆர்டர் வாங்குவதற்கு சென்று விட்டு அவரிடம் பணம் ஏமாற்றியவரை பற்றி விசாரிக்கலாம் என்று செல்கின்றனர்.

 

அந்த நடிகர் விவரத்தை கேட்டுவிட்டு அவன் சரியான பிராடு அவன் ஏதோ ஏற்காடு தான் சொந்த ஊர்னு சொன்ன மாதிரி இருந்தது. என்ன உங்க அண்ணன் இப்படி போய் ஏமாந்து இருக்காரு என்று கூறுகிறார். அடுத்ததாக பூ ஆர்டர் கல்யாணத்துக்காக கேட்டிருந்ததை மீனா கேட்கிறார். அப்போது அவருக்கு தொழில் போட்டியாக இருக்கும் பெண்மணியும் வருகிறார். வந்துவிட்டு என்னங்க எல்லாத்தையும் எனக்கு கொடுங்க என்று கேட்கிறார். உடனே நீங்க உள்ள இருக்க டெக்கரேஷன் எல்லாம் நீங்க பண்ணுங்க வெளிய வெல்கம் டெக்கரேஷன் எல்லாமே மீனா பண்ணட்டும் அப்படின்னு சொல்லிவிட்டு அனுப்புகிறார்.

வெளியே வந்ததும் அந்த பெண்மணி மீனாவிடம் சவால் விட்டு பேசுகிறார். முத்துவும் மீனாவும் சேர்ந்து அந்த பெண்மணி இடம் தொழில் ஒருத்தர் முன்ன பின்ன வருவாங்க ஏன் இப்படி பேசுறீங்க என்று முடிஞ்சா எங்களை தடுத்து பாருங்க என்று சொல்லிவிட்டு செல்கின்றனர். அடுத்ததாக வீட்டுக்கு வந்ததும் விஜயா மீனாவை திட்டுகிறார் எனக்கு பசிக்குது நீ என்ன சமையல் பண்ணாம இப்படி ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்க என்று திட்டுகிறார். நான் காலையில சமையல் எல்லாமே செஞ்சு வச்சுட்டு தான் போனேன் என்று கூறுகிறார் மீனா. உடனே அண்ணாமலை பாத்தியா விஜயா இதுக்கு தான் அவசரப்பட்டு எதுவும் பேசக்கூடாதுன்னு சொல்றது. நீ கிச்சன்ல போய் நீ பார்த்தியா சாப்பாடு வேணும்னா நீ தான் போகணும் உன்னை தேடி சாப்பாடு வராது என்று திட்டுகிறார்.

அடுத்ததாக முத்து அப்பா அந்த ஆளோட போட்டோ இருந்தா கண்டுபிடிச்சதெல்லாம் சொல்றாங்க அவரோட போட்டோ எங்க கிடைக்கும் என்று கேட்கிறார். மீனா ரோஹினி கோயில வச்சுதான அட்வான்ஸ் கொடுத்தாங்க கோயில் சி சி டிவில இருந்து இந்த ஆளோட போட்டோ எடுக்கலாம் என்று கூறுகிறார். உடனே பாத்தியா அப்பா மீனாவுக்கு எப்படி மூளை வேலை செய்யுதுனு அப்படியே போட்டோ எடுத்து கண்டுபிடிக்க முயற்சி பண்ணுவோம் என்று கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோட் முடிந்தது.