இறப்பதற்கு முன்பு ரோபோ சங்கர் கடைசியாக பேசிய வார்த்தை… கண்ணீரோடு தெரிவித்த சகோதரர்…!

By Nanthini on புரட்டாதி 20, 2025

Spread the love

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் தனித்துவமான நகைச்சுவை மற்றும் ரசிகர்களின் அன்பை பெற்று புகழின் உச்சத்திற்கு சென்றவர்தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்பட்ட நிலையில் சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். ஸ்டாண்ட் அப் காமெடி இன் என மேடை நிகழ்ச்சிகள் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய சங்கர், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். அன்றாட பிசியான வாழ்க்கையில் சிரிப்பு மறந்த மக்களை தன்னுடைய காமெடி மூலமாக மகிழ வைத்தவர். இப்படி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திரையுலகில் நடிக்க தொடங்கியிருந்த போதும் உடல் நல குறைவு மோசம் அடைந்து உயிரிழந்தார்.

   

இந்நிலையில் மறைவதற்கு முன்பு ரோபோ சங்கர் கடைசியாக பேசியது குறித்து அவரது அண்ணன் உருக்கமாக தெரிவித்துள்ளார். எப்போது கேட்டாலும் தூக்கம் வரவில்லை என்றுதான் சொல்லுவான். காலையில் 8:00 மணிக்கு ஷூட்டிங் என்றாலும் 4 மணிக்கு எழுந்து தூக்கமே வரவில்லை என்று டிவியை போட்டு உட்காருவான். ஆனால் மருத்துவமனையில் அனுமதித்த அன்றைய நாள் கடைசியாக எனக்கு தூக்கம் வருது, நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று சொன்னான். அதுதான் அவன் இறுதியாக பேசியது. அதன் பிறகு அவன் பேசவே இல்லை என்று கண்ணீரோடு அவருடைய சகோதரர் தெரிவித்துள்ளார்