Connect with us

VIDEOS

நான் குடிப்பழக்கத்தை நிறுத்த அந்த நடிகர் தான் காரணம்.. மேடையில் ஓபனாக பேசிய நடிகர் விமல்.. வைரல் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகர் விமல். இவர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கிரீடம்,குருவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தார். இவர் முதல் முதலாக 2009 ஆம் ஆண்டு பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

   

அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து களவாணி,கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகராக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தெய்வ மச்சான் மற்றும் குலசாமி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில திரைப்படங்களில் விமல் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர் துடிக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் அப்போது மேடையில் பேசிய நடிகர் விமல், ரோபோ சங்கரை பார்த்து பலரும் தற்போது குடியை நிறுத்தி விட்டதாகவும் தானும் குடியை நிறுத்தி 45 நாட்கள் ஆகியதாகவும் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Friday Facts இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@fridayfactsofficial)

author avatar
Nanthini
Continue Reading

More in VIDEOS

To Top