Connect with us

விஜயகாந்துக்கு கேப்டன்னு பேர் வெச்சதே நடிகை ரோஜாவின் கணவர்தான்.. இது எப்படி நடந்துச்சு தெரியுமா..?

CINEMA

விஜயகாந்துக்கு கேப்டன்னு பேர் வெச்சதே நடிகை ரோஜாவின் கணவர்தான்.. இது எப்படி நடந்துச்சு தெரியுமா..?

 

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களுக்கு ஒரு பார்மூலா உண்டு. வெற்றிப்படங்களை தந்த இயக்குநர்களை வைத்துதான் தங்களது படத்தை இயக்க உடனடியாக சம்மதிப்பார்கள். புதுமுக இயக்குநர்களை அவ்வளவு சீக்கிரத்தில் நம்ப மாட்டார்கள். குறிப்பாக படிப்பை மட்டுமே அறிவாக கொண்டு வரும் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தர யோசிப்பார்கள். ஆனால், நடிகர் விஜயகாந்த் மட்டும் அதில் நேர்மாறாக இருந்தார். பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்த புதுமுக இயக்குநர்களுக்கும் வாய்ப்பளித்தார். அந்த வகையில்தான் அவருக்கு ஊமை விழிகள், புலன்விசாரணை, செந்தூரப்பூவே, கேப்டன் பிரபாகரன் போன்ற மிக முக்கியமான மெகா ஹிட் படங்கள் அமைந்தன.

Vijayakanth

   

பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்த ஆர்கே செல்வமணி இயக்கிய படம்தான் புலன் விசாரணை. மிக வித்யாசமான கதை களத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு நீண்டுகொண்டே போனது. எப்போதுமே நடிக்க சலித்துக்கொள்ளாத விஜயகாந்துக்கே, ஏன் இந்த படம் இப்படி நீண்டுகொண்டே போகிறது என்று தோன்றும் அளவுக்கு சென்றுவிட்டது. இதுகுறித்து தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தரிடம் புகாராக சொல்லாமல், ஒரு குறையாக பேசும்போது தெரிவித்திருக்கிறார். ஏனெனில், விஜயகாந்த் நடித்த பல படங்களை தயாரித்தது அவரது நண்பர் இப்ராகிம் ராவுத்தரின் ராவுத்தர் பிலிம்ஸ்தான். இதையடுத்து, புலன் விசாரணை படத்தை விரைவில் முடிக்குமாறு, இயக்குநர் ஆர்கே செல்வமணிக்கு, ராவுத்தர் பிலிம்ஸ் நெருக்கடி தந்த நிலையில், படம் முடிக்கப்பட்டு ரிலீஸ் ஆனது.

Vijayakanth

படம் ரிலீஸ் ஆன பிறகு, புலன் விசாரணை படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. அதுவரை இல்லாத புதிய விஜயகாந்த், போலீஸ் அதிகாரியாக படித்தவராக அவரது நடிப்பை பார்த்து, ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்துவிட்டனர். படம் பார்த்த இப்ராகிம் ராவுத்தர், ஆளுயர மாலை வாங்கிச் சென்று ஆர்கே செல்வமணிக்கு போட்டு மரியாதை செய்திருக்கின்றனர். அப்போதே விஜயகாந்தின் 100வது படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர். விஜயகாந்தின் 100வது படம்தான் கேப்டன் பிரபாகரன். அந்த படம் வெளியான பிறகுதான் அதுவரை புரட்சிக்கலைஞர், விஜி என அழைக்கப்பட்ட விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் என அழைக்கப்பட்டார். அந்த பெயர் விஜயகாந்துக்கு வரக் காரணம் அந்த படம் எடுத்த ஆர்கே செல்வமணிதான். இவர் நடிகை ரோஜாவின் கணவர் என்பதும், இப்போது பெப்ஸி தலைவராகவும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Sumathi
Continue Reading
To Top