Categories: சினிமா

சின்னத்திரை பிரபலம் செந்தில் தலையில் மிளகாய் அரைத்த மோசடி கும்பல்… பணத்தை இழந்து அவரே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

Spread the love

விஜேவாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் தான் மிர்ச்சி செந்தில். இவர்  பிரபல சின்னத்திரை சீரியலான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடத்தை பிடித்தார்.  தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் நான்கு தந்தைகளை காக்கும் ஒரு அண்ணனாக இவர் நடித்து வருகிறார். தற்போது அண்ணா சீரியல் ஜீ தமிழில் முக்கிய சீரியல் ஆக மாறி உள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வர உள்ளன. மிர்ச்சி சந்தையில் மற்றும் நித்தியா ராம் இருவரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்து இந்த சீரியலில் நடித்து வரும் நிலையில் இந்த தொடர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.

துர்கா சரவணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 400 எபிசோடுகளை தாண்டி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் செந்தில் பணத்தை இழந்து விட்டதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனக்குத் தெரிந்த தொழிலதிபர் நண்பர் ஒருவர் whatsapp நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது. அவர் பெரும்பாலும் எனக்கு மெசேஜ் செய்ய மாட்டார். நான் உடனடியாக அவருக்கு பதில் அளித்த போது ஒரு நம்பரை அனுப்பி அதில் 15 ஆயிரம் ரூபாய் அனுப்ப சொன்னார். அவர் கேட்டதும் அந்த நம்பருக்கு நான் பணத்தை அனுப்பி விட்டேன்.

ஆனால் பணத்தை அனுப்பிய பிறகு பெயரைப் பார்த்தால் வேறு ஒரு நபர் பெயர் வந்தது. அது பற்றி போன் செய்து கேட்டபோது தான் அவர் தன்னுடைய whatsapp ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், காலையிலிருந்து 500 பேரிடம் இதே போல் பணத்தை பறித்து ஏமாற்றி உள்ளதாகவும் அவர் கூறினார். அதனால் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த வீடியோவை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்கிறேன். சைபர் மோசடிகளில் இருந்து சற்று கவனமாக இருங்கள் என்று மிர்ச்சி செந்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Nanthini

Recent Posts

21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தும் 33 ஓட்டுதானா?… ஜோதிடருக்கு சொந்த ஊரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி… இணையத்தை சூடேற்றும் ராஜஸ்தான் தேர்தல் கூத்து….!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…

33 seconds ago

ஆற்றில் நுரை பொங்க சோப்பு தான் காரணமா?…. “அந்த சோப்பு பேர் என்ன?”…. சிரிப்பதா.. அழுவதா?….. அரசைக் கிழித்துத் தொங்கப்போட்ட நாம் தமிழர் சீமான்….!

ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…

4 minutes ago

இரவோடு இரவாக மாறிய அதிகாரிகள்…. தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!

தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…

9 minutes ago

அன்பில் மகேஸ் கைதால் வெடித்த சர்ச்சை…. திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்…. நள்ளிரவில் அதிரடி திருப்பம்….!

சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…

14 minutes ago