தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. அந்த படத்துடன் ஒப்பிடும்போது வேட்டையன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்கு ரஜினியை அனைவரும் பாராட்டினர். வேட்டையன் திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தில் அவருடன் அமீர்கான், ஸ்ருதிஹாசன் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டமாக தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தை ரஜினி ஏற்றுள்ளார். கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினி நடிக்க கமிட்டாகி உள்ளார்.
அதன் அறிவிப்பு வீடியோ கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்தையும் முடித்துவிட்டு மணிரத்தினத்துடன் அவர் இணைய வாய்ப்புள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுவரை தோல்வி படமே கொடுக்காமல் இந்திய அளவில் முக்கியமான இயக்குனராக மாறியிருக்கும் வெற்றிமாறன் ரஜினிக்கு கதை சொல்லியதாகவும் அந்த கதையில் நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…