தென்னிந்திய சினிமா அளவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர்தான் சையத் ஹெஷாம் அப்துல் வஹாப். கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்த இவர் சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் காட்டி கர்நாடக மற்றும் இந்துஸ்தானி பாரம்பரிய இசை தொழில்முறை பயிற்சி பெற்றார். தன்னுடைய எட்டு வயதிலேயே பாடத் தொடங்கிய இவர் 11 வயதிலேயே பியானோவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ரியாத்தில் உள்ள சர்வதேச இந்திய பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த பிறகு ஆடியோ பொறியியல் டிப்ளமோ மற்றும் SAE நிறுவனத்தில் ஆடியோ தயாரிப்பில் இளங்கலை பட்டம் பெற்று உயர் கௌரவங்களுடன் பட்டம் பெற்றார்.
2007 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவை விட்டு இந்தியாவிற்கு வந்த இவர் இசைய ரியாலிட்டி ஷோவான ஐடியா ஸ்டார் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு சால்ட் மோங்கோ ட்ரீ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல பிரபல இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தன்னை ஒரு இசையமைப்பாளராக உயர்த்தி காட்டிய இவர் அதிதி சங்கர் மற்றும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஒன்ஸ்மோர் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் “வா கண்ணம்மா” என்ற பாடலுக்கு இவர் இசையமைத்துள்ள நிலையில் இந்தப் பாடல் கோடி கணக்கான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இவர் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில், வினித் ஸ்ரீனிவாசன் சார் எனக்கு ஒரு குரு. என்னோட கஷ்டமான சூழ்நிலையில் ஹிருதயம் பட வாய்ப்பை எனக்கு கொடுத்தார். அதில் தர்ஷனா பாட்டை 30 நிமிடத்தில் ஏசி கூட இல்லாத குட்டி அறையில் கம்போஸ் பண்ணி காண்பித்தேன். ஸ்பீக்கர் கூட இல்ல. என் பாட்டை கேட்டதும் அவர் உடனே ஓகே பண்ணிட்டார். அதன் பிறகு தான் அட்வான்ஸ் வாங்கினேன். அந்த பணத்தை வைத்து தான் ஸ்பீக்கர் வாங்கினேன். முதல்முறையாக நான் வாங்கின அந்த ஸ்பீக்கர் இப்போ என்னுடைய ஸ்டூடியோவில் ஸ்பெஷலான ஒரு இடத்தில் இருக்கு என்று இவர் எமோஷனலாக பேசியுள்ளார்.
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…