வர்றதுக்கு முன்னாடியே எப்படி கருத்து சொல்லலாம்..? சூர்யா சார் ஒரு விதமான அரசியல் பன்றாரு.. ஓப்பனாக பேசிய RJ.பாலாஜி..!

By Soundarya on கார்த்திகை 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் மனைவி ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இதனிடையே திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்ட ஜோதிகா மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளார். தொடர்ந்து சூர்யாவும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

   

இவர் தற்போது இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்த படமானது நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு  வந்தது. படத்திற்கு பலவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஒரு பாடத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

   

 

அந்தமான், ஊட்டி, கேரளா, சென்னை உள்ளிட்ட இடங்களில் சூர்யா 44 வது பட சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டது. சூர்யாவின் 45 ஆவது இந்த திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குகிறார். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.யாரும் எதிர்பார்க்காத காம்போ இணைந்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியான போஸ்டரில் அரிவாள், வேல் என ஆன்மிகம், ஆக்‌ஷனுக்கான குறியீடுகள் இடம்பெற்றது. அத்துடன் குதிரை போன்ற உருவமும் இடம்பெற்றுள்ளது.

இதனால் இந்த படம் என்ன மாதிரியான ஜானரில் உருவாக போகிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி, “சூர்யா 45″தலைப்பு ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் குறித்து பேசிய அவர், கங்குவா ஆடியோ லாஞ்சு மேடையை போஸ் வெங்கட் தவறாகப் பயன்படுத்தினார். அது நடிகர் விஜய்
சார் சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தாலும் அரசியலுக்கு வர முடிவு. வரும் முன் எதிர்க்காதே. சூர்யா சார் படிப்புக்கு உதவி செய்து வித்தியாசமான அரசியல் செய்கிறார் என்று கூறியுள்ளார்.