RJ Balaji

கூட்டத்தாடி ரெண்டுபட்டால் ஊருக்கு கொண்டாட்டம்… நயன்- தனுஷ் விவகாரத்தில் சர்ச்சை கருத்து கூறிய RJ பாலாஜி…

By admin on கார்த்திகை 18, 2024

Spread the love

சினிமா வட்டாரங்கள் சமூக ஊடகங்கள் என அனைத்து இடத்திலும் பேசப்பட்டு வரும் விஷயம் நயன்தாரா தனுஷ் விவகாரம் தான். நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் திருமண வைபவம் Netflix இல் ன்று வெளியாகி இருக்கிறது. அவரது காதல் மலர்ந்தது நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் தான். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். அந்தப் படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்காக தனுஷ் கடந்த இரண்டு வருடங்களாக என்ஓசி சர்டிபிகேட் தராமல் மறுத்துவிட்டார். தற்போது மூன்று நொடி காட்சிகளுக்கு 10 கோடி ரூபாய் கேட்கிறார் என்று நயன்தாரா குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

   

ஆரம்பத்தில் அனைவரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் போகப் போக ஒவ்வொரு விஷயமாக வெளிவர வர நயன்தாரா மீது தான் தவறு தனுஷ் மீது எந்த தவறும் இல்லை என்று நடுநிலையாக இருப்பவர்கள் அனைவரும் தனுஷ் பக்கம் சாய ஆரம்பித்தார்கள்.

   

ஏனென்றால் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் Netflx இல் தங்களது திருமண டாக்குமென்டரியை காசுக்காக தான் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல தனுஷ் அவரது படத்தை சொந்தக்காசை போட்டு தயாரித்திருக்கிறார். அப்போது அவர் பணம் கேட்பதில் என்ன தவறு என்று அனைவரும் கூறினார்கள். மேலும் ஒரு சாரார் இவ்வளவு நாள் இல்லாமல் இந்த பிரச்சினையை கொண்டு வந்ததற்கு காரணம் இந்த netflixயில் அவர்கள் திருமண டாக்குமென்டரியை ப்ரொமோட் செய்வதற்கு தான் என்று கூறினார்கள்.

 

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. அந்த நேரத்தில் இந்த டாக்குமென்டரி வெளியாகி இருந்தால் கூட அதிக மக்கள் பார்த்திருப்பார்கள். இப்போது இரண்டு வருடம் கடந்த நிலையில் எந்த மக்களுக்கும் அதை பார்க்க வேண்டும் என்று நாட்டமில்லை. அதனால் மக்களிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்த தங்களது திருமண டாக்குமெண்டரி பார்க்க வேண்டும் என்று செய்வதற்காக நயன்தாரா ப்படி செய்திருக்கிறார் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான RJ பாலாஜி நயன்தாரா தனுஷ் விவகாரத்தில் கருத்து ஒன்றை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அதேபோல் கூட்டத்தாடி இரண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம். நயன்தாராவும் தனுஷும் மிகப்பெரிய நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் அவர்கள் இருவரும் இந்த பிரச்சினையை சட்டரீதியாக கொண்டு செல்வார்கள். அதன் விளைவுகளை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். இதில் மக்களாகிய நாம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்று கூறியிருக்கிறார் RJ பாலாஜி.