தமிழ் சினிமாவில் சிறந்த வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் தனித்திறமையை காட்டியவர் தான் ரியாஸ் கான். இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் துணை கதாபாத்திரமாக நடித்து வந்த உமா என்பவரை மனம் முடித்துக் கொண்டார். மேலும் இவர்களின் மகனான ஷாரிக் கான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 போட்டிகளாக பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் போட்டியாளரான ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுவும் ஏற்பட்டது. உடன்பிறகு 49 நாளிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அத்துடன் ஐஸ்வர்யாவுடன் நட்பு முடிவடைந்தது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டுள்ள ஷாரிக் கான் 21 நாட்கள் மட்டுமே தாக்குப் பிடித்திருந்தால் பிறகு அதிலிருந்தும் வெளியேறினார். ஆனால் முயற்சியை கைவிடாத ஷாரிக் கான் விஜய் டிவியின் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் அனிதா சம்பத்துடன் சேர்ந்து நடனம் ஆடி முதல் இடத்தையும் பிடித்தார்.

இந்நிலையில் 29 வயது நிரம்பிய ஷாரிக் கான்க்கு வருகிற ஆகஸ்ட் எட்டாம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகயுவம் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ்கான் தெரிவித்துள்ளனர். மேலும் ஷாரிக் கான் தன் காதலித்த மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணையே பெற்றோர்களிடம் கூறி திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கின்றன. மேலும் இன்று திருமணத்திற்கு முன்பாக நடத்தப்படும் மெஹந்தி பங்க்ஷன் நடைபெற்றுள்ளது.

அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் ரசிகர்கள் மத்தில் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடக்க இருப்பதாகவும் ஷாரிக் கான் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.இதில் திரைப்பட பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
