பிக்பாஸ்க்கு அப்புறம் என்னை காணோமா…? செய்தியாளர் கேள்வியால் கடுப்பான ரித்விகா…. என்ன சொன்னார் தெரியுமா…??

By Soundarya on அக்டோபர் 25, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரித்திவிகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவதற்கு முன்பாகவே சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன் முதலில் பாலா இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பரதேசி திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் மேரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் துணை நடிகைக்கான விருது பெற்றார்.

#image_title

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு அதிகமாக கிடைக்கவில்லை.

   
   

#image_title

 

குண்டு திரைப்படத்தில் கூட இவருக்கு மூன்றாம் நிலை கதாபாத்திரம் தான் வழங்கப்பட்டது.பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் தமிழ் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்தும் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார்.  அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 2 – வில் டைட்டில் வின்னர் ஆனார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே இவருடைய டார்ச் லைட் படம் வெளியானது.

#image_title

இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுக்கையில், ரொம்ப நாளாவே உங்களை தமிழ் சினிமாவில் காணோம், உங்களால் வெளியே வரமுடியலயா? இல்ல படம் செலக்டிவ்வா பண்றீங்களா என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  5 படம் இப்போ ரிலீஸ் ஆக இருக்கு அது ரிலீஸ் ஆனா தானே நான் இண்டஸ்ட்ரியில இருக்கேன்னா? இல்லையான்னு தெரியும் என்று கோபமாக பதிலளித்துள்ளார்.