பொதுவாகவே மழைக்காலம் வந்துவிட்டால் வெளியில் கிடக்கும் பூச்சிகள் வீட்டிற்கு உள்ளே வரத் தொடங்கி விடும். அந்த பூச்சிகளில் ஒன்றுதான் கரையான். இவை வீட்டில் உள்ள சுவர், மர சாமான்கள் மற்றும் கதவுகள் உள்ளிட்ட மறைவான இடங்களில் வாழக்கூடியவை. அந்த இடத்தை அரிந்து அப்படியே பாழாக்கி விடும். மழைக்காலத்தில் இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். ஏனென்றால் மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் மறைந்து வாழ்வதற்காக இவை கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஓரங்களில் வாழும். கரையான்களை அப்படியே விட்டு விட்டால் அவை அதனுடைய இனத்தை பெருக்கி வீட்டில் ஒருவிதமான அசோகர்யத்தை ஏற்படுத்தும். இப்படி தொல்லை கொடுக்கக்கூடிய கரையான்களை எளிதில் விரட்டி விடலாம்.
அதற்கு இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் இரண்டையும் கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கரையான் உள்ள இடத்தில் நேரடியாக தெளித்து விட வேண்டும். வினிகரில் இருக்கக்கூடிய அசிட்டிக் அமிலம் மற்றும் எலுமிச்சை சாறு சிற்றுக்க அமிலம் இரண்டும் கரையான்களை அப்படியே கொன்றுவிடும்.
அடுத்து சூடான நீரில் உப்பு கலந்து கரையான்கள் அதிகம் வந்து போகும் இடத்தில் தெளித்தால் கரையான்கள் அப்படியே அழிந்து விடும்.
அரை கப் தண்ணீரில் மூன்று சொட்டு கிராம்பு எண்ணெய் போட்டு கலந்து கரையான்கள் இருக்கும் இடத்தில் தெளித்து விட்டால் கிராம்பு வாசனைக்கு அவை வரவே வராது.
உங்க வீட்டில் இருக்கக்கூடிய இந்த எளிய பொருட்களை பயன்படுத்தி நீங்கள் கரையான்களை விரட்டி அடிக்கலாம்.
