மராட்டிய மாநிலம் மும்பை நகரில் கன்சோலி கிராமத்தில் வசித்து வரும் 40 வயது பெண் ஒருவர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவருக்கும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் இடையே நீண்ட கால தகராறு இருந்து வந்த நிலையில் சிறு சிறு விஷயங்களுக்கு கூட இருவரும் சண்டை போட்டு வந்துள்ளனர். இந்தப் பகை அப்படியே வளர்ந்து நாளடைவில் பழிவாங்கும் அளவுக்கு மாறி உள்ளது. பக்கத்து வீட்டு பெண்ணுக்கு 10 வயதில் மனநலம் பாதித்த மகன் ஒருவர் உள்ள நிலையில் ஆறு வயதில் ஒரு மகளும் உள்ளார். இப்படியான நிலையில் பக்கத்து வீட்டுப் பெண்ணை பழிவாங்கும் நோக்கத்தில் அவருடைய மனநலம் பாதித்த மகனை அழைத்து அவனுடைய இளைய சகோதரியிடம் பாலியல் உறவில் ஈடுபடும்படி அந்த பெண் கூறியுள்ளார்.
இதனை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார். பிறகு அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் இது குறித்து அறிந்த அந்த பக்கத்து வீட்டுப் பெண் அதிர்ச்சி அடைந்து அந்த பெண்ணிடம் நியாயம் கேட்டுள்ளார். தொடர்ந்து போலீசில் அவர் புகார் அளித்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் அவருடைய மனநலம் பாதித்த மகனை கொண்டு அவனுடைய இளைய சகோதரியுடன் பாலியல் உறவில் ஈடுபட வைக்க அந்தப் பெண் செய்த சதித்திட்டம் மற்றும் அது பற்றிய வீடியோவை வைரலாக்கியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
