சேலம் மாவட்டத்தில் ஒருவர் கொள்ளையடிக்கப்படுவது போன்ற வீடியோ வைரலான நிலையில் தற்போது திடிக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது உண்மையில் கொள்ளை அடிக்கும் செயல் அல்ல மாறாக பழிவாங்கும் நடவடிக்கை என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. சமூக ஊடகத்தில் வைரலான இந்த சம்பவத்தில், மூன்று பேர் ஒரு நபரின் மொபைல் போனை பறித்து சென்றனர். ஆனால் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது தொழில் முறை குற்றம் கிடையாது, ஒரு நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டவர் சென்னை பிரம்மநாயகம் ஆவார். இவர் போல இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாக திரும்பி ஒருவரை இணையத்தில் துன்புறுத்தி உள்ளார்.
அந்த சிறுமியின் நண்பரான ராமகிருஷ்ணன் பிரம்மநாயகத்தை எச்சரித்தும் அவர் கேட்காததால் பழிவாங்க முடிவு செய்துள்ளார். ராமகிருஷ்ணன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து போலி ஐடி மூலமாக பிரம்ம நாயகத்தை ஏமாற்றி சென்னைக்கு வரவழைத்துள்ளார். அதன் பிறகு அவருடைய மொபைல் போனை பறித்து அதிலிருந்து சிறுமி தொடர்பான ஆபாச புகைப்படங்கள் மற்றும் சாட்டுகளை அழித்துள்ளார். இதனை போனிலிருந்து அகற்றுவது தான் இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
