“சொத்தை ஆசிரமத்திற்கு தருவேன்”…. ஆத்திரத்தில் பெற்ற தந்தையையே வெட்டிக்கொன்ற என்ஜினீயர் மகன்…. அடக்கத்திற்கு முன் வெளிவந்த பகீர் உண்மை….!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற மாநகரப் பேருந்து ஓட்டுநர் கத்தியால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சிவபாதம் (70) என்பவரே இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை வழக்க தொடர்பாக, தடயங்களை மறைத்து மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய சிவபாதத்தின் மனைவி ரேணுகா (50) மற்றும் அவரது மகன் மதுசூதனன் (39) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சிவபாதத்திற்கு சென்னை பெருங்குடி மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் பல வீடுகள் உள்ள நிலையில், அவற்றின் வாடகை வருவாயே குடும்பத்தின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்துள்ளது. கப்பல் நிறுவன வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்த பொறியியல் பட்டதாரியான மகன் மதுசூதனனுக்கும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிவபாதத்திற்கும் இடையே செலவுகளுக்குப் பணம் தருவது தொடர்பாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்தது. குடும்பத் தகராறு காரணமாக சிவபாதம் வாலாஜாபாத் அருகே உள்ள மருதம் கிராமத்தில் தனியாகத் தங்கி, அன்றாட செலவுகளுக்கு உறவினர்களிடம் கடன் வாங்கி வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

சமீபத்தில் மருதம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்த மனைவியும் மகனும், சிவபாதத்திடம் சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், சிவபாதம் வர மறுத்ததுடன், தனது மருத்துவச் செலவிற்காக வீடுகளின் வாடகைப் பணத்தைக் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சம்மதிக்காததால், தனக்குரிய சொத்துகளை அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என சிவபாதம் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் மதுசூதனன், அதிகாலையில் தந்தை சிவபாதத்துடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் அவரது கழுத்து மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டியதில் சிவபாதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலைக்குப்பின், தாய் ரேணுகாவும் மகன் மதுசூதனனும் சேர்ந்து வீட்டில் இருந்த ரத்தக்கறைகளைத் துடைத்து அழித்துவிட்டு, சிவபாதம் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் கூறி கதறி அழுது நாடகமாடியுள்ளனர். இதனை நம்பிய உறவினர்கள் சிவபாதத்தின் உடலை எரியூட்டுவதற்காக இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகளைச் செய்தனர். அப்போது, சிவபாதத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வாலாஜாபாத் காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் சிவபாதத்தின் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பது உறுதியானதையடுத்து, காவல்துறையினர் ரேணுகா மற்றும் மதுசூதனனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சொத்து தகராறில் தந்தையைக் கொலை செய்துவிட்டு மாரடைப்பு என நாடகமாடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்த வாலாஜாபாத் காவல்துறையினர் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பெத்த தந்தையைச் சொத்துக்காகக் மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் மருதம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

2 minutes ago

ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…

8 minutes ago

திக்… திக்… வீட்டில் சடலமாக கிடந்த கணவன்-மனைவி… கதறியபடி மீட்கப்பட்ட 2 வயது குழந்தை… பின்னணி என்ன?… கன்னோஜில் உலுக்கிய கொடூரம்…!

கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…

24 minutes ago

விபத்தா?… இல்ல கொலையா?… இதயத்தில் ஆணி பாய்ந்து ஊழியர்… துடிதுடித்து இறந்த பகீர் சம்பவம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்…!!

நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…

31 minutes ago

இத்தனை வருஷ வேர்வை வீண் போகல… காவல் அதிகாரியின் நெகிழ்ச்சியான பதவி உயர்வு தருணம்… ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…

43 minutes ago