BREAKING: பதவி விலகும் அண்ணாமலை?… பாஜகவில் திடீர் பரபரப்பு… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on புரட்டாதி 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியில் உள்ளன. அதன் வெளிப்பாடாக செங்கோட்டையன் மீண்டும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கூறி இருந்ததால் இபிஎஸ் அவரை மொத்தமாக கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டார். இதனால் தொடர்ந்து அதிமுகவில் மோதல் அதிகரித்து வருகிறது.

இதனிடையே அதிமுகவைத் தொடர்ந்து தற்போது பாஜகவிலும் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதாவது பாஜக மற்றும் அதன் கூட்டணியை நயினார் நாகேந்திரனை விட அண்ணாமலை தான் சிறப்பாக வழி நடத்தினார் என்ற பேச்சுகள் எழுந்ததால் இருவருக்கும் இடையே பணிப்போர் நிலவுவதாக பேசப்படுகிறது.

   

இந்நிலையில் பதவி மாற்றத்தில் இருந்தே அண்ணாமலை அமைதியான போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில் திமுகவை பாராட்டி பேசிய அவர், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கவில்லை. இப்படியான நிலையில் நிலம் வாங்கியதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக என்பதை எங்கேயும் குறிப்பிடவில்லை. EX IPS என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் கட்சியில் இருந்து விலகுகிறாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.