அரசின் மாஸ்டர் பிளான்…! மகளிருக்கு ரூ.2,500 உரிமை தொகை உறுதி…? பட்ஜெட்டில் காத்திருக்கும் அதிரடி சர்ப்ரைஸ்…!!

By Devi Ramu on ஆடி 21, 2026

Spread the love

தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையைக் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியாக உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினால் தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும் வரவேற்பும் மக்கள் ஆதரவும் கிடைக்கும் என உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அடுத்த மாதமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, புதிய பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்க அரசுத் திட்டம் தீட்டி வருகிறது. இத்திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் மாநிலம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கானக் குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள் என்பதால், பெண்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.