தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்டுப் பேருந்தில் அடைக்கப்பட்ட அனுஜ் பகத் என்ற பத்திரிகையாளர், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலிஸ் அதிகாரியிடம் கெஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
போராட்டக்காரர்கள் கதவைத் திறக்க முயன்றபோது, அதைக் கட்டுப்படுத்தப் போராடிய பெண் போலிஸைப் பார்த்து, ” அக்கா… உங்களை என் சொந்த அக்காவாக நினைக்கிறேன், தம்பிக்காக என்னை வெளியே போக விடமாட்டீங்களா?” என்றும், “தில்லி பெண் போலிஸாரின் கடமை உணர்ச்சிக்குச் சல்யூட்” என்றும் நகைச்சுவையாகக் பேசியுள்ளார்.
https://www.instagram.com/reel/DeFOMY5T19X/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெற்ற இந்தப் பேரணியில், தில்லி காவல்துறையினர் சுமார் 500 போராட்டக்காரர்களைக் கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர். போராட்டக் களத்தில் நடந்த இந்தச் சுவாரசியமான உரையாடல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
