தென்னிந்திய சினிமாவை பொருத்தவரையில் எத்தனையோ பிரபலங்கள் சினிமாவில் அடையாளம் காணப்பட்டாலும் ஒரு சிலர் யாராலும் செய்ய முடியாத அளவுக்கு அரிய சாதனைகளை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் தாசரி நாராயணராவ். இந்திய சினிமா உலகில் தசாவதானி என்ற அடைமொழி இவருக்கு தான் பொருந்தும். தெலுங்கில் மிகப் பிரபலமான இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் பாடல் ஆசிரியர் என்று பன்முகங்களைக் கொண்டவர். ஆந்திர மாநிலம் தெற்கு கோதாவரி யில் கடந்த 1942 ஆம் ஆண்டு பிறந்தவர். தாசரி என்பது இவருடைய குடும்பப் பெயர்.

சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் சிறிது காலம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவருக்கு இரண்டு மகன்கள். சென்னை வானொலி நிலையத்திற்காக தெலுங்கு நாடகங்களை எழுதினார். பிறகு பீம் சிங்கிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதே சமயம் பி ஆர் பந்தலுவின் பத்மினி பிக்சர்ஸில் நிர்வாகியாக பணியாற்றிய ராகவளு தாசரி நாராயணர்வின் கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் தாத்தா மணவாடு என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. அதே சமயம் 151 படங்களை இயக்கி சாதனை புரிந்ததால் வேர்ல்ட் ரெக்கார்டு புக்கில் இடம் பிடித்தார். 53 திரைப்படங்களையும் தயாரித்துள்ள.

கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியன பழ மொழிகளில் படங்களை உருவாக்கிய வித்தகர். 1984 ஆம் ஆண்டு இவருக்கு சினிமா உலகில் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த ஒரு வருடத்தில் மட்டும் இவரின் சார்பில் 10 படங்கள் வெளிவந்தது. அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட். 45 வருட சினிமா பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர். எண்ணற்ற விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் ஒரே வருடத்தில் மட்டும் 70 படங்களை இயக்கி மிகப்பெரிய சாதனை படைத்தவர். இப்படி பல புகழுக்குரிய இவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
