BREAKING: CM விஜய்க்கு எதிராக பேசி சிக்கிய சேகர்பாபு…. இரவோடு இரவாக நடந்த சம்பவம்… பரபரப்பில் தமிழக அரசியல்….!

By Nanthini on புரட்டாதி 15, 2026

Spread the love

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரைத் தரக்குறைவாகப் பேசி அவதூறு பரப்பியதாகவும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகவும் எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், திமுக மூத்த நிர்வாகி சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த அவதூறுப் பேச்சைக் கண்டித்து அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், சேகர்பாபு விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன, இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.