உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் நிலத்தகராவில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு தான் உயிரோடு இருக்கிறேன் என்று மனுவோடு நீதிபதி அலுவலகத்திற்கு வந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாரதா தேவ் என்ற பெண் தன்னுடைய உறவினர்கள் தன்னுடைய உரிமையான வாரிசை பெறுவதற்காக தன்னை இறந்து விட்டதாக அறிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தன்னுடைய மறைந்த தந்தையின் ஒரே மகளான சாரதா தேவி தன்னுடைய இறப்புக்கு முன்பு தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் சட்டபூர்வமாக தனக்கு உயில் எழுதி வைத்திருந்ததாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் உயில் எழுதப்பட்டு சொத்து அவருடைய பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு சாரதா தேவ் தந்தையின் மூத்த சகோதரர்களின் மகன்கள் அவர் இறந்து விட்டதாக காட்ட பதிவுகளை மோசடி செய்து சொத்து உரிமை தங்களுக்கு மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அந்தப் பெண் மாவட்ட நீதிபதி அலுவலகத்தில் தான் உயிரோடு இருக்கிறேன் என்றும் தான் இறந்து விட்டதாக தன்னுடைய சொத்தை எடுத்துக் கொள்வதற்காக இப்படி கூறி இருக்கிறார்கள் என்றும் அந்த பெண் முறையிட்டுள்ளார்.பின்னர் முழுமையாக விசாரணை செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு துணை பிரிவு மாஜிஸ்திரேட் கூறியுள்ளது. மேலும் பெண் இறந்ததாக போலி சான்றிதழ் வழங்கியது கண்டறியப்பட்டால் சான்றிதழ் வழங்கியதில் ஈடுபட்ட அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றவாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…