ஜீ தமிழில் ஒவ்வொரு வாரமும் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சியை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பு கொண்ட விவாதம் நடைபெறும் நிலையில் கடந்த வாரம் ஜோதிடம் நம்புபவர்கள், ஜோதிடத்தை நம்பாதவர்கள் என விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்ட நிலையில் நடிகை ரேகா நாயர் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசினார். அந்த நிகழ்ச்சியில் தனது கணவர் தொலைந்து போன கதையை கூறி அவர் பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து பேசிய அவர், 19 வயதில் நான் திருமணம் செய்து கொண்டேன்.

நானும் என்னுடைய கணவரும் தங்கி இருந்த வீட்டு வாசலில் வந்து கோடாங்கி ஒருவர் இரவு நேரத்தில் இந்த வீட்டில இருக்கிற வண்டிக்கு ஏற்ற சக்கரம் கிடையாது என்று சொல்லிவிட்டு சென்றார். அந்த வயசுல அது எனக்கு புரியல. ஆனால் என் பக்கத்து வீட்டில் இருக்கும் அம்மா ஒருவர் கொஞ்சம் பார்த்து இருந்துக்கோ என்று என்னிடம் சொன்னார். அதற்கு நான், அவன் வேலையில்லாம குடிச்சிட்டு வந்து ஏதாவது சொல்லியிருப்பான்னு சொன்னேன். ஆனா அவன் சொல்லிட்டு போன நான் கே வருஷத்துல என் முதல் கணவர் தொலைந்து விட்டார்.

இன்று வரை எங்க போனார் எப்படி இருக்கார் உயிரோடு இருக்காரா இல்லையான்னு கூட தெரியல. 18 வருஷமா அவர் இல்ல. சமீபத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு தான் நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். அன்று கோடாங்கி சொன்னதை நான் நம்பவில்லை ஆனால் இன்று அது என்னை உறுத்துகிறது. அந்த நேரம் அவரை கூப்பிட்டு ஏதாவது கேட்டிருக்கலாம் அல்லது ஒரு ஜோதிடரை பார்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. காலை வேலைக்கு போன கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவருடைய நண்பர்களிடம் விசாரித்த போது பெங்களூரு சென்று விட்டதாக கூறினார்கள்.

பல இடங்களுக்கு போய் தேடியும் அவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில வருடங்கள் கழித்து அவர் உயிரோடு இருக்கார் என்ற செய்தி மட்டும் வந்தது. எனக்கு ஆரம்பத்தில் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லை ஆனால் தற்போது நிறையவே உள்ளது. ஒரு ஜோதிடர் எனக்கு இரண்டாம் திருமணம் நடக்கும் என்று கூறியது போலவே இப்போது எனக்கு திருமணமும் நடந்து விட்டது. நானும் என்னுடைய மகளும் ஒன்றாகவே இருக்க முடியாது என்று ஜோதிடர் கூறியதைப் போலவே என்னுடைய மகள் விடுமுறையில் மட்டுமே வீட்டிற்கு வந்து என்னுடன் இருந்து செல்கிறார் என்று வருத்தத்துடன் ரேகா நாயர் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
