காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், அம்மாநில அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் நிராகரித்துள்ளது.
இத்திட்டம் காவிரி ஆற்றின் நீரை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டி, இந்த அறிக்கையைக் கடந்த மாதமே ஆணையம் நிராகரித்த தகவல் தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மேகதாது அணைக் கட்டும் முயற்சியைக் கர்நாடகா தீவிரப்படுத்தி வந்த சூழலில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் ஆறுதலை அளிப்பதாக அமைந்துள்ளது.
