டெல்லியில் வசிக்கும் முனாஸ்ஸா என்ற காஷ்மீர் முஸ்லிம் மாணவி, வாடகை வீடு தேடும்போது தான் எதிர்கொண்ட மதப் பாகுபாடுகளைப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசியத் தலைநகரில் தங்குவதற்கு ஒரு பிளாட் தேடுவது மாணவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாகவும், குறிப்பாகத் தனது காஷ்மீரி முஸ்லிம் அடையாளம் காரணமாகப் பலமுறை வீடு மறுக்கப்பட்டதாகவும் அவர் கண்ணீருடன் விவரித்துள்ளார். இந்தப் பதிவை ‘தி முஸ்லிம்’ என்ற எக்ஸ் தளம் பகிர்ந்துள்ளது.
Location: Delhi
A Kashmiri Muslim girl, Munazza, shared her experience on social media. She was denied a flat because she is Muslim. She was asked if she was Muslim, and at one place, she was told she would only get the flat if she didn't wear a hijab. pic.twitter.com/9OI0rdPjDA
— The Muslim (@TheMuslim786) December 31, 2025
அந்த வீடியோவில், சில வீட்டு உரிமையாளர்கள் முஸ்லிம்களுக்கு வீடு தர மறுப்பதாகவும், தான் ஒரு காஷ்மீரி என்று தெரிந்ததும் நிலைமை இன்னும் மோசமடைவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு கட்டத்தில், தனது ஹிஜாபை அகற்றினால் மட்டுமே பிளாட் வாடகைக்குக் கிடைக்கும் என்று ஒருவர் நிபந்தனை விதித்ததாக அவர் கூறியிருப்பது பெரும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. 2026-ஆம் ஆண்டிலும் தலைநகரில் நிலவும் இத்தகைய மதப் பாகுபாடுகள் குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
