ஓபிஎஸ் மட்டும் போதும்… அதிமுக, திமுகவுக்கு ரெட் சிக்னல் கொடுத்த அமைச்சர்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் கூட்டணிகளும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது. எப்போதுமே தேர்தல் சமயத்தில் சொந்தக் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் அமைச்சர்களும் மாற்றுக் கட்சியில் இணைவது வழக்கம்தான். அதிலும் இந்த முறை அதிமுகவிலிருந்து பல்வேறு பிரிவுகள் உருவாகி வரும் நிலையில் பலரும் திமுகவில் இணைந்து வருகிறார்கள். மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது அழகுராஜா போன்ற முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது புதிதாக ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கமும் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்த தகவலை வைத்தியலிங்கம் முழுமையாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், என்னை பற்றி பரவும் தகவல் அனைத்தும் பொய். எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுகவை ஒருங்கிணைத்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைப்பது தான் எனது நோக்கம் என்று அவர் கூறியுள்ளார். திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது, அதிமுகவுடன் நான் இணைய போகிறேன் என்று பரவும் தகவல் அனைத்தும் வதந்தி எனக் கூறி அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுகவில் அதிமுகவை சேர்ந்த பலர் இணைந்த நிலையில் வைத்தியலிங்கத்தை சேர்த்து விட்டால் திமுகவின் பலம் பெருகும் என்று ஸ்டாலின் திட்டமிட்ட நிலையில் இவருடைய இந்த கருத்து ஸ்டாலினை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. மேலும் ஓபிஎஸ் உடன் மீதம் இருக்கும் ஒருவரையும் தன் பக்கம் சேர்த்து விட்டால் ஓபிஎஸ் தனிமரம் ஆகிவிடுவார் என்று இபிஎஸ் திட்டம் தீட்டிய நிலையில் இந்த அசைவும் தற்போது நிறைவேறாமல் போய்விட்டது.

Nanthini

Recent Posts

பற்றி எரியும் சென்னை ஓஎம்ஆர்… டெக் மகேந்திரா வளாகத்தில் பயங்கர தீ விபத்து… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…

3 minutes ago

அதிமுகவில் அதிரடி திருப்பம்… எஸ்பி வேலுமணி தான் எனக்கு தலைவர்.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த கேசி வீரமணி…!

அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…

11 minutes ago

குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்… வங்கி கணக்கிற்கு வருகிறது ரூ.2500… முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…

16 minutes ago

“டிரஸ் இல்லாம VIDEO அனுப்பு”… 14 வயது சிறுவர்களின் விபரீத விளையாட்டு… பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி…!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…

20 minutes ago

BREAKING: சென்னை ஐடி நிறுவனத்தில் பெரும் தீ விபத்து… உச்சக்கட்ட பதற்றம்…!

சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…

26 minutes ago

“வீட்டுத் தோட்டத்தில் பிணமான பெண்”… தலையணையால் அழுத்தி கொன்ற தம்பதி… தூத்துக்குடியை உலுக்கிய கொடூர கொலை…!

தூத்துக்குடி அருகே உள்ள கே.டி.சி. நகரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…

45 minutes ago