மனித ரூபத்தில் வந்த கடவுள்… வெள்ளத்தில் மிதந்த பள்ளி வாகனம்… சிக்கிக் கொண்டு தவித்த குழந்தைகள்… வைரலாகும் வீடியோ…!

By Divyamayakannan on ஆவணி 19, 2025

Spread the love

மும்பையில் இன்று காலை முதல் கனமழைப்  பெய்து வருகிறது. இதை அடுத்து பல பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. பல்கர், சிந்துதர்க், அவுரங்காபாத், ஹிங்கோலி, ஜால்கான், ஜல்னா உள்ளிட்ட இடங்களில் ஆரஞ்சு அலாட் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொட்டி தீர்க்கும் கனமழையினால் டெல்லியில் இருக்கும் யமுனா நதி நாளைக்குள் 260 மீட்டர் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

205.33 மீட்டரை கடந்து அபாய நிலைக்கு வந்துள்ளது என்று மத்திய நீர் வாரியம் தெரிவித்திருக்கிறது. மும்பையின் அந்தேரி, கட் கோபார், நெவிமும்பை மற்றும் தெற்கு மும்பை ஆகிய இடங்களில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. நகர்புறத்தில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

   

அதிக மழை காரணத்தினால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தில் சில வண்டிகள் சிக்கிக் கொண்டு தத்தளிக்கின்றன. பள்ளி வேன் ஒன்று காந்தி மார்க்கெட் அருகில் உள்ள கிங்க்ஸ் சர்கில் என்கிற இடத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. மும்பை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளை மீட்டு மாடுங்கா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.