Facebook, Instagram, Gmail பாஸ்வேர்டு மறந்து போச்சா?…. கவலை வேண்டாம்… இத ட்ரை பண்ணி பாருங்க….!

Spread the love

பொதுவாகவே இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். போன் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்ற சூழல் தான் தற்போது நிலவுகிறது. அந்த அளவிற்கு சமூக ஊடகங்களின் பயன்பாடும் அதிகரித்து விட்டது. ஒருவர் பல்வேறு சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துக் கொள்வதால் அத்தனை கணக்குகளின் பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. மேலும் ஸ்மார்ட் ஃபோன்களில் தானாக உள்நுழைய அனுமதிக்கப்படுவதால் பலரும் பாஸ்வேர்டை மறந்துவிடும் வாய்ப்பு அதிகரித்து விட்டது. இப்படியான சூழலில் மறந்து போன பாஸ்வேர்டுகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Facebook, instagram, gmail போன்ற செயலிகளின் கணக்குகளுக்கான பாஸ்வேர்டுகள் மறந்துவிட்டால் இந்த முறையை பயன்படுத்தி எளிதில் கண்டுபிடிக்கலாம்.

உங்கள் அனைத்து சமூக ஊடக கணக்குகளுக்கான பாஸ்வேர்டுகளும் உங்களுடைய ஃபோனில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு இருக்கும். அதற்கு உங்கள் போனில் உள்ள settings என்பதற்குச் சென்று கீழே ஸ்க்ரோல் செய்து Google விருப்பத்தை கண்டறிய வேண்டும். Google விருப்பத்தை தேர்ந்தெடுத்து பிறகு google services என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். All services என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொடர்ந்து autofill with google என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் google password manager என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்கள் போனில் உள் நுழைந்துள்ள அனைத்து செயலிகளும் வரிசையாக பட்டியலிடப்பட்டிருக்கும். நீங்கள் எந்த செயலியின் பாஸ்வேர்டை பார்க்க வேண்டுமோ அதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய போனில் கைரேகை அல்லது பாஸ்வேர்டை பயன்படுத்தி அந்த செயலியின் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை நீங்கள் பார்வையிட முடியும்

Nanthini

Recent Posts

கோவையில் அதிர்ச்சி..! பிணத்தை தோண்டி எடுத்து 3 1/2 பவுன் தங்கம் திருட்டு… பக்கத்து வீட்டு இளைஞர்கள் துணிகரம்.. மயான ஊழியரின் பகீர் வாக்குமூலம்..!!

கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…

3 minutes ago

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

9 minutes ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

17 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

26 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

39 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

44 minutes ago