இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், ஜார்க்கண்ட் அணியின் கேப்டனுமான இஷான் கிஷன், 2025 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) இறுதிப் போட்டியில் பல சாதனைகளை முறியடித்து, தனது அணி முதல்முறையாக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார் ஹரியானாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், இஷான் கிஷன் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம், SMAT இறுதிப் போட்டியில் சதமடித்த முதல் ஜார்க்கண்ட் வீரர் மற்றும் போட்டி வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
A SIX TO COMPLETE THE HUNDRED IN SMAT FINAL.
– Ishan Kishan played a stellar knock. 🥶pic.twitter.com/SRgh0sSzkD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 18, 2025
இஷான் கிஷனின் இந்த அபார ஆட்டத்தால், ஜார்க்கண்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இது SMAT இறுதிப் போட்டிகளில் பதிவான அதிகபட்ச ஸ்கோர்களில் ஒன்றாகும். இந்தப் பெரிய இலக்கை எட்ட முடியாமல் திணறிய ஹரியானா அணி, இறுதியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜார்க்கண்ட் அணி தங்கள் முதல் SMAT பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
