கோவை ஸ்பெஷல் கோர்ட்டில் அரசு வழக்கறிஞரை நியமிக்க, தவெகவைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பரிந்துரை செய்ததாகக் கூறப்படும் கடிதம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தவெகவில் அரசு வழக்கறிஞர் நியமனங்களுக்கு சுமார் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக அந்தப் பொதுமக்களும் அக்கட்சியினரே சிலரும் ஏற்கனவே புகார் கூறி வந்த நிலையில், தற்போது வைரலாகி வரும் இந்த பரிந்துரைக் கடிதம் அந்தப் புகார்களுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனங்கள், இதுபோன்ற அரசியல் பரிந்துரைகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் மூலமாகத்தான் நடக்கிறதா என்ற பலத்த கேள்வியையும், சந்தேகத்தையும் இந்த விவகாரம் பொதுமக்கள் மற்றும் சட்டத்துறையினர் மத்தியில் எழுப்பியுள்ளது.

