திராவிட கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக வெளிகாட்டிக் கொண்டு இன்று வரை எந்த ஒரு கட்சியோடும் கூட்டணி அமைக்காமல் இருக்கும் நாம் தமிழர் கட்சி 14 வருடங்களாக தொடர்ந்து போராடிவரும் நிலையில் சமீபத்தில் தான் மக்களவை தேர்தலில் ஓட்டு வங்கி அதிகரித்தது. ஆனால் இன்னும் ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. அப்படி இருக்கும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் விஜய்க்கு என் ஆதரவு உண்டு, என் தம்பி அவர் என்றெல்லாம் சீமான் கூறி வந்த நிலையில் விஜயின் பேச்சு திராவிட கட்சியையும் பாஜகவையும் அட்டாக் செய்தது போல நாம் தமிழர் கட்சியையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அட்டாக் செய்ததாக அந்த கட்சியின் தொண்டர்கள் விஜயை ட்ரோல் செய்து விமர்சித்து வந்தார்கள்.
இதனை தொடர்ந்து சீமானும் தற்போது விஜய்யை அணில் என்றெல்லாம் விமர்சனம் செய்து வருகிறார். விஜய்யின் கட்சி இளைஞர்கள் ஆதரவை அலேக்காக தூக்குவதால் தவெக மீது நாதகவுக்கு ஏற்கனவே பூசல் இருந்துவருகிறது. இந்த நிலையில் தான் ‘ஸ்டாலின் அங்கிள்’ சர்ச்சைக்கு பிறகு இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த உதயநிதி, விஜய் அட்டாக் செய்வது தொடர்பாக சீமானுடன் பேச ஒரு குழுவை அவரது வீட்டிற்கு அனுப்பியிருந்தாராம். இதற்கு சீமானும் சரி சொல்லிவிட்டாராம். இதனால், இனி எல்லா இடத்திலும் விஜய்யை ரோஸ்ட் செய்யும் மோடில் தான் சீமான் உள்ளாராம்.
