“ஒரே குடும்பம், வெவ்வேறு கட்சிகள்”… “ஆதவ் அர்ஜுனா – டெய்சி பிரிவுக்குக் காரணம் அரசியலா?”…. பெரியம்மா திலகவதி ஐ.பி.எஸ் உடைத்த உண்மை…!

Spread the love

தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி மார்ட்டின் ஆகியோர் தங்களது 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அண்மையில் ஆதவ் அர்ஜுனா அமைச்சராகப் பதவியேற்ற விழாவிலும் டெய்சி பங்கேற்றிருந்த நிலையில், இருவரும் தனித்தனிப் பாதையில் பயணிக்க முடிவு செய்திருப்பது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தங்களது பிரிவு குறித்து டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 14 ஆண்டுகளாக நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைவர்களாகவும், பெற்றோர்களாகவும் அன்புடனும் புரிதலுடனும் பயணித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது தம்பதிகளாக இணைந்து வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், தங்களது மகனை இணைந்து வளர்ப்பதிலும் அவனது நலனை உறுதி செய்வதிலும் இருவரது அர்ப்பணிப்பும் எப்போதும் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனா மீது தனக்கு எப்போதும் மரியாதை உண்டு எனவும், அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் கூறி, தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஆதவ் அர்ஜுனாவைச் சிறு வயதிலிருந்தே வளர்த்த அவரது பெரியம்மாவும், தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியுமான திலகவதி ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ளார். அதில், டெய்சி மார்ட்டின் குடும்பத்தினர் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் பயணிப்பதும், ஆதவ் அர்ஜுனா தனது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணித்து வருவதும் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படக் காரணமாக இருந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது அவர்களின் தனிப்பட்ட விவகாரம் என்பதால் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை என்றும், இருவரும் நண்பர்களாகவே பிரிகிறார்கள் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஆதவ் அர்ஜுனா, பெரியம்மா திலகவதி மற்றும் குடும்பத்தினரின் அரவணைப்பில் வளர்ந்தவர். தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டினின் மகளான டெய்சியை அவர் காதல் திருமணம் செய்துகொண்டார். டெய்சியின் தாயார் லீமா ரோஸ் லால்குடி தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வரும் சூழலில், இரு குடும்பத்தினரின் மாறுபட்ட அரசியல் பயணங்களும், தீவிர அரசியல் ஈடுபாடுமே இந்தப் பிரிவுக்குப் பின்னணியாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Nanthini

Recent Posts

“அவர் எனக்கு தாய்க்கு மேலானவர்…” மாமியார் சிதைக்கு விறகு அடுக்கிய மருமகன்… சடங்கு முடிந்த சில நிமிடங்களில் அரங்கேறிய கோர சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…

4 மணத்தியாலங்கள் ago

தந்தையிடம் வாங்கிய பணம்…! ஒரு குடும்பத்தையே தீர்த்து கட்டி வாலிபர் செய்த கொடூரம்… ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…

4 மணத்தியாலங்கள் ago

தொடரும் தேடுதல் வேட்டை!… “அப்பா எங்களை விட்டுடுங்க”… மகன்களை நீரில் வீசிய தந்தை… விவசாயிகள் மீது கல்வீச்சு… அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…

4 மணத்தியாலங்கள் ago

சீச்சீ… என்ன கொடுமை இது?… பள்ளி மாணவருடன் தகாத உறவு வைத்திருந்த பெண் ஆசிரியர்… செல்போனில் சிக்கிய ஆதாரங்கள்… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…

4 மணத்தியாலங்கள் ago

நகை கடையில் பயங்கரம்…! திடீரென புகுந்த கும்பல்… ஊழியரை துப்பாக்கியால் தாக்கி நகை, பணம் கொள்ளை… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…

4 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… என்ன நீயெல்லாம் ஜென்மம்?… 80 வயது பாட்டியைக் கூட விட்டு வைக்காத கொடூரம்… CCTV- யில் சிக்கிய மர்ம நபர் யார்?… நெல்லையில் போலீசார் தீவிர வேட்டை…!

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…

5 மணத்தியாலங்கள் ago