Connect with us

இயக்குனர் ஸ்ரீதர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்..!!

CINEMA

இயக்குனர் ஸ்ரீதர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்..!!

 

பிரபல இயக்குனரும் வசனகர்த்தாவுமான ஸ்ரீதர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். கடந்த 1959-ஆம் ஆண்டு ரிலீசான கல்யாணப்பரிசு திரைப்படம் மூலம் ஸ்ரீதர் இயக்குனராக தனது வெற்றி பயணத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் ஜெமினி கணேசன் சரோஜாதேவி விஜயகுமாரி ஆகியோர் நடித்தனர்.

முக்கோணக் காதல் கதைகளின் மன்னன் | director sridhar birthday special -  hindutamil.in

   

வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இந்த படத்தை இயக்கினார். அதன் பிறகு தேனிலவு, நெஞ்சம் மறப்பதில்லை, அலைகள், உரிமைக்குரல் ஆலய தீபம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை ஸ்ரீதர் இயக்கினார். இப்போது உள்ள இயக்குனர்கள் தங்களுக்கென ஒரு பெயர் வந்ததால் அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகின்றனர்.

இளமை இயக்‍குநர் ஸ்ரீதர்! | director sridhar birthday special - hindutamil.in

ஆனால் ஸ்ரீதர் அந்த காலத்தில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு ஒரு காரணம் இருந்தது. வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஸ்ரீதர் ஒரு பங்குதாரராக இருந்தார். அவருடன் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன், ரத்தினம் ஆகியோரும் வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்தனர். இந்நிலையில் ஸ்ரீதர் இயக்கிய கல்யாண பரிசு திரைப்படம் வெற்றி பெற்றதால் பல முன்னணி தயாரிப்பாளர்களிடம் இருந்து ஸ்ரீதருக்கு அழைப்பு வந்தது.

நெஞ்சிருக்கும் வரை'... ஸ்ரீதர்! - புதுமை இயக்குநர் ஸ்ரீதர் பிறந்தநாள் இன்று  | director sridhar - hindutamil.in

ஒரு சில நல்ல வாய்ப்புகளை மட்டும் ஸ்ரீதர் பயன்படுத்தி கொண்டார். அதில் வீனஸ் பிக்சர்ஸ் பங்குதாரர்களுக்கு உடன்பாடு இல்லை. வீனஸ் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு மட்டும்தான் நீங்கள் படம் பண்ண வேண்டும் என அவர்கள் கூறியதால் தனது சுதந்திரத்திற்கு அது ஏற்றதாக இல்லை என ஸ்ரீதர் நினைத்தார். அதுமட்டுமில்லாமல் வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பல வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்க ஸ்ரீதர் நினைத்தார்.

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் அமைத்த ட்ரெண்ட் செட் ! – News18  தமிழ்

ஆனால் வசூலை குவிக்கும் கமர்சியல் படங்களையே பங்குதாரர்கள் விரும்பினர். இதனால் தனது ரசனைக்கு ஏற்ப வித்தியாசமான படங்களை இயக்க வேண்டும் என எண்ணி சித்ராலயா தயாரிப்பு நிறுவனத்தை ஸ்ரீதர் தொடங்கினார். இந்த நிறுவனம் 1960-இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தேன்நிலவு, காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை, நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

மதியின் திரை நட்சத்திரங்கள்: இயக்குநர் ஸ்ரீதர் பிறந்த தினம் ஜூலை 22 ,1933 .

author avatar
Priya Ram
Continue Reading
To Top