Categories: சினிமா

MGR அரசியலுக்கு சென்றதும் தேய்ந்த திரைவாழ்க்கை.. மரணத்துக்கு காரணமான அந்த திருமணம்.. தேங்காய் சீனிவாசன் வாழ்க்கை பயணம்..

Spread the love

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. எம் ஆர் ராதா, பாலையா, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு என மிகப்பெரிய பாரம்பரியமே உள்ளது.

இவர்களில் ஒருவராக மிகக்குறுகிய காலமே படங்களில் நடித்து மறைந்தவர்தான் தேங்காய் சீனிவாசன். மேடை நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சீனிவாசன். ஒரு விரல் என்ற  நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக பட்டைய கிளப்ப அதுவே அவரின் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டது. அப்படி பிரபல நடிகராக இருந்த போது ஒரு விரல் என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த படத்தில் அவரது வேடம் க்ளிக் ஆகவே நகைச்சுவை ரூட்டைப் பிடித்துக்கொண்டு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பல படங்களில் நெகட்டிவ் வேடங்களிலும் நடித்திருக்கிறார். எம் ஜி ஆருக்கு உற்ற நண்பராக இருந்த தேங்காய் சீனிவாசன் அவரின் பல படங்களில் அவருக்கு நண்பராக நடித்திருப்பார். எம் ஜி ஆர் அரசியலுக்கு அழைத்த போது அவர் செல்லவில்லை. அப்படி சென்றிருந்தால் அவருக்கு மந்திரி உள்ளிட்ட பதவிகள் கிடைத்திருக்கலாம்.  இவரது நடிப்பின் உச்சம் என்றால் காசேதான் கடவுளடா மற்றும் ரஜினிகாந்தோடு அவர் நடித்த தில்லு முல்லு படத்தை சொல்லலாம்.

தேங்காய் சீனிவாசன் தன்னுடைய புகழின் உச்சத்தில் இருக்கும்போதே தன்னுடைய 50 ஆவது வயதில் இறந்தார். அவரின் இறப்பு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்தது. இந்நிலையில் தேங்காய் சீனிவாசனின் உறவினரும் மருத்துவமருமான காந்தராஜ் அவரின் மறைவுக்குக் காரணம் என்ன என்பது பற்றி பேசியுள்ளார்.

அவர் அளித்த நேர்காணலில் “எம் ஜி ஆருக்கு நெருக்கமானவராக இருந்ததால் அவருக்கு எம் ஜி ஆர் படங்களில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எம் ஹ்ஜி ஆர் அரசியலுக்கு சென்றதால் இவருக்கும் வாய்ப்புகள் குறைந்தன. அரசியலுக்கு வந்திருந்தால் அவர் நல்ல பதவிகளைக் கூட பெற்றிருப்பார். குடும்பத்தில் சில குழப்பங்க நடந்தன. அவரின் மகனோ, மகளோ மாற்று மதத்தினர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.  அதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார். அதுதான் அவர் உடல்நலக் குறைவுக்குக் காரணமாக அமைந்தது. ஒருவகையில் அவரின் மரணத்துக்கு அதுவும் காரணம்” என பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…

3 minutes ago

கல்யாணத்திற்கு NO சொன்ன தாய்…. டிரம்மிற்குள் பிணமான 11 வயது மகன்…. மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…

6 minutes ago

BIG BREAKING: தமிழகத்தில் தேர்தல் நிறுத்தம்?…. கடைசி நேர பரபரப்பு…. சற்றுமுன் பதற்றம்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…

7 minutes ago

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

20 minutes ago

“தந்தை இறந்த செய்தி கேட்டு கதறிய தருணம்”… கலைஞர் போட்ட ஒரே ஒரு கண்டிஷன்… மேடையிலேயே கண் கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…

21 minutes ago

நாளைக்கு டிக்கெட் எடுக்காதீங்க!… ஏப்ரல் 23 இலவச பேருந்து பயணம்…. தமிழக அரசின் ஸ்பெஷல் கிப்ட்.. யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…

25 minutes ago